UPSC ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் EPFO நிறுவனத்தில் காலியாக உள்ள Enforcement Officer / Accounts Officer, Assistant Provident Fund Commissioner பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 577 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2023 அன்று முதல் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
EPFO நிறுவனத்தில் காலியாக உள்ள Enforcement Officer / Accounts Officer பணிக்கு என 418 பணியிடங்களும், Assistant Provident Fund Commissioner பணிக்கு என 159 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் ஒரு Graduate Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கருதப்படுகிறது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த UPSC EPFO பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2023 அன்று முதல் 17.03.2023 அன்று வரை https://www.upsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.