Section Officer, Assistant Section Officer பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை ஆதார் துறை கீழ் வரும் UIDAI நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின்
மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ள Section Officer பணிக்கு என 02 பணியிடங்களும், Assistant Section Officer பணிக்கு என 01 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Section Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level - 06, 07 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Assistant Section Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level - 03, 04, 05 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 23.03.2023 அன்றைய நாள் கணக்கின்படி, 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த UIDAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (23.02.2023) தபால் செய்ய வேண்டும்.