NISG ஆனது UIDAI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Manager State பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.12,00,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், UIDAI நிறுவனத்தில் Project Manager State பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த UIDAI நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் BE, B.Tech, MCA, MBA, M.Tech, PGDM ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Project Management, Software Project Management போன்ற பணி சார்ந்த துறைகளில் 05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Project Manager State பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
இந்த UIDAI நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.6,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.12,00,000/- வரை ஒரு வருடத்திற்கான சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Project Manager State பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 14.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.