University Grants Commission (UGC) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (NAAC) காலியாக உள்ள Director பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,10,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சிலில் (NAAC) Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Professor அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் 65 வயது வரை மட்டுமே பணிபுரிய இயலும். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.2,10,000/- + ரூ.11,250/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 10.03.2023 என்ற இறுதி நாளுக்குள் https://www.ugc.ac.in/ugc_jobs.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.