தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.12,000/- ஊதியம்!

By Gokula Preetha - February 1, 2023
14 14
Share
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - ரூ.12,000/- ஊதியம்!


கன்னியாகுமரி மாவட்ட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலகு தற்போது வெளியிட்ட அறிவிப்பில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 10.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.    

TNSRLM பணியிடங்கள்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு என 03 பணியிடங்கள் கன்னியாகுமரி மாவட்ட, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ளது.

வட்டார ஒருங்கிணைப்பாளர் கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree அல்லது CA தேர்ச்சி பெற்ற மற்றும்  MS-Office தெரிந்த பெண்களாக இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் வயது விவரம்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் ஊதிய விவரம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.12,000/- ஊதியமாக பெறுவார்கள்.    

TNSRLM தேர்வு செய்யும் முறை:

வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co-Ordinator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

TNSRLM விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.02.2023) தபால் செய்ய வேண்டும். 

 
Share
...
Gokula Preetha