8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலை - ரூ.50,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு!!  

By Gokula Preetha - January 30, 2023
14 14
Share
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலை - ரூ.50,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு!!  


நீலகிரி மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (TNRD Nilgiris) வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இரவு காவலர் (Night Watchman) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

இரவு காவலர் (Night Watchman) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே நீலகிரி மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ளது.

இரவு காவலர் கல்வி தகுதி:
  • இந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
இரவு காவலர் வயது வரம்பு:

01.07.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும், அதிகபட்சம் 37 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரவு காவலர் ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNRD தேர்வு செய்யும் முறை:

நேர்முக தேர்வு மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNRD விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.02.2023 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். 

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha