தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Tourist Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இன்று (25.01.2023) முதல் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TNPSC நிறுவனத்தில் காலியாக உள்ள Tourist Officer பணிக்கு என 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Tourist Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduate Degree, M.Phil, Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SCs, SC(A)s, STs, MBCs / DCs, BC (OBCM)s, BCMs, Destitute Widows, ESM பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் Level 22 என்ற ஊதிய அளவின் படி, ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Tourist Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 25.01.2023 அன்று முதல் 23.02.2023 அன்று வரை https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.