TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,11,500/- ஊதியம் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!    

By Gokula Preetha - January 31, 2023
14 14
Share
TNPSC-ல் புதிய வேலைவாய்ப்பு 2023 - ரூ.2,11,500/- ஊதியம் || விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!    


TNPSC என்னும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது 2023 ஆம் ஆண்டுக்கான Combined Library State / Subordinate Services Examination-யை நடத்துவதற்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் Interview Post / Non Interview Post கீழ்வரும் College Librarian, District Library Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC காலிப்பணியிடங்கள்:
  • TNPSC-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • College Librarian - 08 பணியிடங்கள்
  • Librarian and Information Officer - 01 பணியிடம்
  • District Library Officer - 03 பணியிடங்கள்
  • Library Assistant - 02 பணியிடங்கள்
  • Librarian and Information Assistant Grade II - 21 பணியிடங்கள்
TNPSC பணிக்கான கல்வி தகுதி:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, Master Degree, M.Phil அல்லது Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.    

TNPSC பணிக்கான வயது வரம்பு:
  • College Librarian பணிக்கு 59  வயது எனவும்,
  • Librarian and Information Officer / District Library Officer பணிகளுக்கு 37 வயது எனவும்,
  • Library Assistant / Librarian and Information Assistant Grade II பணிகளுக்கு 32 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SCs, SC(A)s, STs, MBC / DCs, BC(OBCM)s, BCMs, Destitute Widows பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
TNPSC பணிக்கான ஊதியம்:
  • College Librarian பணிக்கு Level 24 என்ற ஊதிய அளவின் படி ரூ.57,700/- முதல் ரூ.2,11,500/- வரை என்றும்,  
  • Librarian and Information Officer / District Library Officer பணிகளுக்கு Level 22 என்ற ஊதிய அளவின் படி ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/- வரை என்றும்,
  • Library Assistant பணிக்கு Level 11 என்ற ஊதிய அளவின் படி ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை என்றும்,  
  • Librarian and Information Assistant Grade II பணிக்கு Level 08 என்ற ஊதிய அளவின் படி ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.  
TNPSC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC விண்ணப்ப கட்டணம்:
  • பதிவு கட்டணம் - ரூ.150/-
  • தேர்வு கட்டணம் (Interview Post / Non Interview Post) - ரூ.200/-
  • தேர்வு கட்டணம் (Non Interview Post) - ரூ.100/-
  • SC / ST / PWBD / Destitute Widows - விண்ணப்ப கட்டணம் கிடையாது
TNPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 01.03.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.         

Download Notification Link
Online Application Link
Share
...
Gokula Preetha