தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான Combined Engineering Subordinate Service Examination நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலம் தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Overseer / Junior Draughting Officer, Junior Draughting Officer, Drughtsman, Foreman பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 1083 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்று முதல் (03.02.2023) தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Bachelor's Degree அல்லது Post Graduate Diploma முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
01.07.2023 அன்றைய நாளின் படி, இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயது முதல் 37 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.05.2023 அன்று நடைபெற உள்ள எழுத்து தேர்வு (Paper I, Paper II) மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 03.02.2023 அன்று முதல் 04.03.2023 அன்று வரை https://apply.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.