முதல்வர், உதவி பேராசிரியர், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிகளுக்கு என அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள முதல்வர், உதவி பேராசிரியர், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் / தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், தமிழ் / ஆங்கில மொழியில் தட்டச்சு செய்ய தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (17.02.2023) அனுப்ப வேண்டும்.