தமிழ்நாடு பொதுப்பணித்துறை (TN PWD) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Apprentices பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 500 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், தமிழ்நாடு பொதுப்பணி துறையில் (TN PWD) Graduate Apprentices பணிக்கு என 355 பணியிடங்களும், Technician Apprentices பணிக்கு என 145 பணியிடங்களும் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Apprenticeship விதிமுறைக்கு உட்பட்ட வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Graduate Apprentices பணிக்கு ரூ.9,000/- என்றும், Technician Apprentices பணிக்கு ரூ.8,000/- என்றும் மாத உதவித் தொகையாக வழங்கப்படும்.
இந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை (TN PWD) சார்ந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting மற்றும் Document Verification வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 31.03.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.