TN MRB என்னும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Theater Assistant பணிக்கு என 335 பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு மருத்துவ துணை சேவை பிரிவில் காலியாக உள்ள Theater Assistant பணிக்கு என மொத்தமாக 335 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Theater Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின், Theater Technician பிரிவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Theater Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 3 என்ற ஊதிய அளவின் படி, ரூ.16,600/- முதல் ரூ.52,400/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்./
இப்பணிக்கு தகுதியான நபர்கள் கல்வி இறுதியாண்டில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் Mertilist என்னும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Theater Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.mrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 23.02.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படும்.