TMB வங்கி ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் External Advisor பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TMB வங்கியில் காலியாக உள்ள External Advisor பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
External Advisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் பணி சார்ந்த துறைகளில் Scale V என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Assistant General Manager மற்றும் Executive பதவிகளில் குறைந்தபட்சம் 06 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த TMB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.11.2022 அன்றைய நாளின் படி, 65 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
External Advisor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த TMB வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 10.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.