மருத்துவமனை தர மேலாளர் பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்கம் கீழ் செயல்பட்டு வரும் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.60,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை தர மேலாளர் பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனை தர மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Hospital Administration, Health Management, Public Health பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது எனவும் அதிகபட்சம் 45 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனை தர மேலாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.60,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
15.03.2023 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை தர மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் deangmctpr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (08.03.2023) அனுப்ப வேண்டும்.