எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த விளம்பரம் ஒற்றை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தின் படி, Technical Officer மற்றும் Assistant Project Engineer உள்ளிட்ட காலியிடங்களுக்கு பொருத்தமான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: ECIL நிறுவனத்தில் Technical Officer பணிக்கு என 43 பணியிடங்களும், Assistant Project Engineer பணிக்கு என 23 பணியிடங்களும் காலியாக உள்ளது.
விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி: Assistant Project Engineer பணிக்கு Diploma / B.Sc பட்டதாரிகளின் விண்ணப்பங்களும், Technical Officer பணிக்கு BE / B.Tech பட்டதாரிகளின் விண்ணப்பங்களும் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
பணிக்கான முன்னனுபவம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 01 ஆண்டு அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தேவையான வயது: 31.01.2023 அன்றைய தினத்தின் படி, Assistant Project Engineer பணிக்கு 25 வயதுக்குள் உள்ளவர்கள் மற்றும் Technical Officer பணிக்கு 30 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
வயது தளர்வுகள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள் என்றும், OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள் என்றும், PWBD பிரிவினருக்கு 10 ஆண்டுகள் என்றும் வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்: தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Assistant Project Engineer பணிக்கு ரூ.24,500/- முதல் ரூ.30,000/- வரை என்றும், Technical Officer பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: இந்த ECIL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாட்கள்: Assistant Project Engineer பணிக்கான நேர்காணல் 01.03.2023, 04.03.2023, 07.03.2023 ஆகிய நாட்களிலும், Technical Officer பணிக்கான நேர்காணல் 28.02.2023, 03.03.2023, 06.03.2023 ஆகிய நாட்களிலும் நடைபெற உள்ளது.
நேர்காணலில் கலந்து கொள்ளும் முறை: இந்த ECIL நிறுவன பணிகளுக்கான நேர்காணலுக்கு வரும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல் மற்றும் சுய விவர பட்டியலையும் (Biodata) உடன் இணைத்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.