முன்னணி தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் MS SQL Server பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த IT துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
TCS நிறுவனத்தில் காலியாக உள்ள MS SQL Server பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE (Bachelors Of Engineering) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே MS SQL Server பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.
MS SQL Server பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பெங்களூரில் உள்ள TCS நிறுவனத்தில் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.
இந்த TCS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
MS SQL Server பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.04.2023 என்ற இறுதி நாளுக்குள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.