பிரபல தனியார் IT நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Information Developer, Automation Tester பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. IT துறையில் பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Information Developer, Automation Tester பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இந்த TCS நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE (Bachelor's of Engineering) Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 06 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.
இந்த TCS நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview, Group Discussion மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த TCS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.