ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான விடைத்தாள்கள் இன்று (பிப்ரவரி 27) SSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் மார்ச் 13 ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையம் (SSC) ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கான முடிவுகளை இம்மாதம் 9 ஆம் தேதியன்று அறிவித்தது. இதை தொடர்ந்து, SSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட Tier-I தேர்வின் விடைத்தாள்கள் இப்போது தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், ‘தேர்வு முறையில் அதிக வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காகவும், தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று இறுதி விடைத் தாள்களை வினாவுடன் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 1 முதல் புதிய பால் வகை அறிமுகம் – ஆவின் தகவல்!!
இந்த முடிவுகளை விண்ணப்பதாரர்கள் SSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 13, 2023 ஆம் தேதி வரை விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அதற்கு மேல் கால அவகாசம் கொடுக்கப்படாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.