Spices Board of India-ல் பணிபுரிய வாய்ப்பு - ரூ.22,200/- மாத சம்பளம் || உடனே விண்ணப்பியுங்கள்!
Spices Board of India-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Project Fellow மற்றும் System Engineer பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Walk-in-Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Walk-in-Test-ல் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Spices Board of India பணியிடங்கள்:
- Spices Board of India-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Project Fellow - 03 பணியிடங்கள்
- System Engineer - 01 பணியிடம்
Project Fellow / System Engineer கல்வி விவரம்:
- Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- System Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, BCA, MCA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Project Fellow / System Engineer வயது விவரம்:
- Project Fellow பணிக்கு அதிகபட்சம் 30 வயது எனவும்,
- System Engineer பணிக்கு அதிகபட்சம் 40 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Project Fellow / System Engineer ஊதிய விவரம்:
- Project Fellow பணிக்கு ரூ.21,000/- என்றும்,
- System Engineer பணிக்கு ரூ.20,500/- முதல் ரூ.22,200/- வரை என்றும் மாத ஊதியமாக தரப்படும்.
Spices Board of India தேர்வு செய்யும் முறை:
- இந்த Spices Board of India சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் பின்வரும் தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Walk-in-Test வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- Project Fellow - 28.02.2023
- System Engineer - 10.03.2023
Spices Board of India விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிகளுக்கான Walk-in-Test-ல் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Walk-in-Test-க்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.