South Indian வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Marketing Officer கீழ்வரும் பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இன்று முதல் (07.02.2023) Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், South Indian வங்கியில் Marketing Officer கீழ்வரும் Marketing for MSME & NRI Business, Social Media, Search Engine Optimisation பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Marketing பாடப்பிரிவில் MBA, PGDM, B.Tech ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த South Indian வங்கி சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Scale I / II என்ற ஊதிய அளவின்படி ரூ.10.23 லட்சம் முதல் ரூ.13.10 லட்சம் வரை ஒரு வருடத்திற்கான சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இந்த South Indian வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2023 அன்று முதல் 15.02.2023 அன்று வரை https://recruit.southindianbank.com/RDC/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.