இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC India Limited) ஆனது புதிய சுற்றறிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Senior Advisor to CMD பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தகுதி போன்ற தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: NLC India நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Advisor to CMD பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.
பணிக்கான கல்வி விவரம்: Mechanical Engineering பாடப்பிரிவில் Bachelor's Degree (BE / B.Tech) முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
பணிக்கான பிற தகுதிகள்: Senior Advisor to CMD பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில / PSU நிறுவனங்களில் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் Executive Level கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
பணிக்கான கால அளவு: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு காலம் வரை பணிபுரியலாம் என இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கான வயது: 24.02.2023 அன்றைய நாளின் படி, 64 வயதுக்குள் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக்கொள்ளப்படும்.
மாத ஊதியம்: Senior Advisor to CMD பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு NLC India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு பற்றிய விவரம்: இப்பணிக்கு தகுதியான நபர்கள் NLC India நிறுவன தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான விவரம்: விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சுற்றறிக்கையில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இறுதி நாள்: 06.03.2023 என்ற கடைசி நாளுக்குள் General Manager அலுவலகத்திற்கு வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.