மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் அனுபவசாலிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!  

By Gokula preetha - February 24, 2023
14 14
Share
மத்திய அரசின் IOCL நிறுவனத்தில் அனுபவசாலிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மறந்து விடாதீர்கள்!  

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (IOCL) வலைத்தள பக்கத்தில் Security Chief பணிக்கு குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த IOCL பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.  

Security Chief பணிக்கு குறித்த தகவல்கள்:

காலிப்பணியிடங்கள்: Security Chief பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
 
பணிக்கான தகுதிகள்: மாநிலம் மற்றும் உத்திர பிரதேசம் சார்ந்த காவல் துறையில் DY. SP முதல் DIG வரை உள்ள பதவிகளில் போதிய ஆண்டு காலம் சேவை செய்து ஓய்வு பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே Security Chief பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.            

வயது பற்றிய விவரம்: Security Chief பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பதிவாளர்கள் 62 வயது முழுமை அடையாதவராக இருக்க வேண்டும்.

பணிக்கான கால அளவு: இந்த IOCL நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 01 ஆண்டு முதல் 03 ஆண்டு வரை பணிபுரியலாம் என இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.        

பணிக்கான ஊதியம்: Security Chief பணிக்கு தேர்வாகும் பொருத்தமான நபர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மாத ஊதியம் கொடுக்கப்படும்.  

தேர்வு பற்றிய விவரம்: இந்த IOCL நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வுக்குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.  

விண்ணப்பிப்பதற்கான வழிமுறை: Security Chief பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள Chief Human Resource Manager அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.  

கடைசி நாள்: 28.02.2023 என்ற இறுதி நாளுக்குள் அலுவலகம் வந்து சேரும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என பரிசீலிக்கப்படும். 

Download Notification & Application Link 
Share
...
Gokula preetha