SECL நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ. 31,852/- ஊதியம்!

By Gokula Preetha - February 1, 2023
14 14
Share
SECL நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள் - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || ரூ. 31,852/- ஊதியம்!
 

Mining Sirdar மற்றும் Dy.Surveyor பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை South Eastern Coalfields Limited (SECL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 405 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 03.02.2023 அன்று முதல் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.          

SECL நிறுவன பணியிடங்கள்:
  • SECL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Mining Sirdar - 350 பணியிடங்கள்
  • Dy.Surveyor - 55 பணியிடங்கள்
Mining Sirdar / Dy.Surveyor கல்வி விவரம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் DGMS அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் பெற்றவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
Mining Sirdar / Dy.Surveyor வயது விவரம்:
  • இந்த SECL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.01.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.    
Mining Sirdar / Dy.Surveyor ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் தோறும் ரூ.31,852.56/- ஊதியமாக பெறுவார்கள்.

SECL நிறுவன தேர்வு செய்யும் முறை:

இந்த SECL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shotlist, Written Test மற்றும் Doucment Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SECL நிறுவன விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EWS - ரூ.1180/-
  • SC / ST / PwBD / Women / EXM / Ex. Employees  - விண்ணப்ப கட்டணம் கிடையாது
SECL நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (03.02.2023 அன்று முதல் 23.02.2023 அன்று வரை) http://www.secl-cil.in/career.php என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (07.03.2023) தபால் செய்ய வேண்டும்.  

Download Notification Link
Online Application Link
Share
...
Gokula Preetha