மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான South Eastern Coalfields Limited-ல் (SECL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Advisor (Secretarial) பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,05,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
SECL நிறுவனத்தில் Advisor (Secretarial) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Advisor (Secretarial) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் Secretarial துறையில் Executive பதவியில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த SECL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 60 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Advisor (Secretarial) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.37,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மற்றும் தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த SECL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் gmee.secl@coalindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 04.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.