SCI என்னும் இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Company Secretary Trainees பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Company Secretary Trainees பணிக்கு என 03 பணியிடங்கள் இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தில் (SCI) காலியாக உள்ளது.
இந்த இந்திய கப்பல் போக்குவரத்து கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ICSI Professional Program, ICSI Executive Programme-ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
Company Secretary Trainees பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.10,000/- முதல் ரூ.12,500/- வரை மாத உதவித் தொகையாக பெறுவார்கள்.
இந்த இந்திய கப்பல் போக்குவரத்து கழக (SCI) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.