SAIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலை - ரூ.2,50,000/- ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!

By Gokula Preetha - January 27, 2023
14 14
Share
SAIL நிறுவனத்தில் மத்திய அரசு வேலை - ரூ.2,50,000/- ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!


SAIL நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Super Specialist, Specialist, GDMOS ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,50,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • SAIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Super Specialist - 05 பணியிடங்கள்
  • Specialist - 10 பணியிடங்கள்
  • GDMOS - 16 பணியிடங்கள்
SAIL  பணிக்கான கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Super Specialist - DM, DNB, DrNB, Mch
  • Specialist - MBBS + PG Diploma / PG Degree
  • GDMOS - MBBS + Diploma
SAIL  பணிக்கான வயது வரம்பு:

06.02.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 69 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SAIL  பணிக்கான ஊதியம்:
  • Super Specialist பணிக்கு ரூ.2,50,000/- என்றும்,  
  • Specialist பணிக்கு ரூ.1,20,000/- முதல் ரூ.1,60,000/- வரை என்றும்,    
  • GDMOS பணிக்கு ரூ.90,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.    
SAIL நிறுவன தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள Interview மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAIL நிறுவன Amazon விண்ணப்பிக்கும் விதம்:

இந்த SAIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 

Download Notification & Application Form PDF
Share
...
Gokula Preetha