SAIL நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - ரூ.17,000/- சம்பளம் || நேர்காணல் மட்டுமே!
Critical Care Nursing Training, Hospital Administration Training, Advanced Physiotherapy Training பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை SAIL நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்:
- SAIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Critical Care Nursing Training - 02 பணியிடங்கள்
- Hospital Administration Training - 10 பணியிடங்கள்
- Advanced Physiotherapy Training - 02 பணியிடங்கள்
SAIL பணிக்கான கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Critical Care Nursing Training - Nursing பாடப்பிரிவில் Diploma, B.Sc
- Hospital Administration Training - MBA, BBA, PG Diploma
- Advanced Physiotherapy Training - Physiotherapy பாடப்பிரிவில் Bachelor's Degree
SAIL பணிக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
SAIL பணிக்கான சம்பளம்:
- Critical Care Nursing Training பணிக்கு ரூ.17,000/- எனவும்,
- Hospital Administration Training பணிக்கு ரூ.15,000/- எனவும்,
- Advanced Physiotherapy Training பணிக்கு ரூ.10,000/- எனவும் மாத சம்பளமாக தரப்படும்.
SAIL நிறுவன தேர்வு செய்யும் விதம்:
இந்த SAIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAIL நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் http://igh.sailrsp.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 01.03.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.