இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Young Professionals பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 ஆண்டு முதல் 05 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Young Professionals பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Diploma, MBA, PGDM முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Young Professionals பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதந்தோறும் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 28.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.