இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - 150+ காலிப்பணியிடங்கள் || ரூ.2,20,000/- சம்பளம்!
SAI என்னும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Coach, Senior Coach, Chief Coach, HPC ஆகிய பணிகளுக்கு என 152 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,20,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Coach - 44 பணியிடங்கள்
- Senior Coach - 34 பணியிடங்கள்
- Chief Coach - 49 பணியிடங்கள்
- HPC - 25 பணியிடங்கள்
SAI பணிக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Diploma முடித்தவராக இருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் SAI, NS NIS சார்ந்த நிறுவனங்களில் Coaching பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
SAI பணிக்கான வயது வரம்பு:
- Coach பணிக்கு 45 வயது எனவும்,
- Senior Coach பணிக்கு 50 வயது எனவும்,
- Chief Coach பணிக்கு 60 வயது எனவும்,
- HPC பணிக்கு 60 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
SAI பணிக்கான சம்பளம்:
- Coach பணிக்கு ரூ.1,05,000/- என்றும்,
- Senior Coach பணிக்கு ரூ.1,25,000/- என்றும்,
- Chief Coach பணிக்கு ரூ.1,45,000/- என்றும்,
- HPC பணிக்கு ரூ.2,20,000/- என்றும் மாத சம்பளமாக தரப்படும்.
SAI தேர்வு முறை:
இந்த SAI நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation மற்றும் Contract Basics விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAI விண்ணப்பிக்கும் முறை:
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணையதள முகவரி மூலம் தங்களது விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் madhav.wanave@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுபவ வேண்டும்.
- 03.03.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.