இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Performance Analysts மற்றும் High Performance Analyst பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 54 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Performance Analysts பணிக்கு என 07 பணியிடங்களும், High Performance Analyst பணிக்கு என 47 பணியிடங்களும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ளது.
இந்த SAI நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த SAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் https://sportsauthorityofindia.gov.in/saijobs/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் இப்பணிகளுக்கு என தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.