Rail Vikas Nigam Limited (RVNL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. General Manager (Business Development) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 20.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், RVNL நிறுவனத்தில் General Manager (Business Development) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager (Business Development) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் BE / B.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் Planning, Bidding, Business Development, Project Procurement, Project Management ஆகிய துறைகளில் E-7 அல்லது E-8 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த RVNL நிறுவனம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய தேதியின் படி, 55 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
General Manager (Business Development) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Screening / Interaction மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager (Business Development) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Annexure - II என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு 20.03.2023 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.