RVNL நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் DGM (S&T), Sr. DGM / DGM / Sr. MGR (Electrical) பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,20,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், RVNL நிறுவனத்தில் DGM (S&T) மற்றும் Sr. DGM / DGM / Sr. MGR (Electrical) பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
இந்த RVNL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருப்பது அவசியமானது ஆகும்.
இந்த RVNL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Screening / Interaction ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 20.03.2023 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.