ரயில்வே துறை காலிப்பணியிடங்கள் - ரூ.23.4 லட்சம் ஆண்டு ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
ரயில்வே துறை கீழ் இயங்கிவரும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Solid Waste Expert, Used Waste Expert, Senior Procurement Specialist, Senior Expert ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
ரயில்வே துறை பணியிடங்கள்:
RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 10 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Solid Waste Expert (Senior) - 02 பணியிடங்கள்
- Solid Waste Expert (Deputy) - 02 பணியிடங்கள்
- Used Waste Expert (Senior) - 02 பணியிடங்கள்
- Used Waste Expert (Deputy) - 02 பணியிடங்கள்
- Senior Procurement Specialist - 01 பணியிடம்
- Senior Expert - 01 பணியிடம்
RITES நிறுவன கல்வி விவரம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
- Solid Waste Expert - ME / MTech Degree
- Used Waste Expert - ME / MTech Degree
- Senior Procurement Specialist - BE / B.Tech / Post Graduate Ddegree / MBA
- Senior Expert - ME / MTech Degree
RITES பணிக்கான வயது விவரம்:
- Solid Waste Expert (Deputy), Used Waste Expert (Deputy) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய தேதியின் படி, 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
- மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய தேதியின் படி, 50 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
RITES பணிக்கான சம்பள விவரம்:
- Used Waste Expert (Senior) பணிக்கு ரூ.23,04,000/- என்றும்,
- Solid Waste Expert (Deputy), Used Waste Expert (Deputy) பணிகளுக்கு ரூ.15,06,000/- என்றும்,
- மற்ற பணிகளுக்கு ரூ.18,02,000/- என்றும் ஒரு வருடத்திற்கான சம்பளமாக வழங்கப்படும்.
RITES நிறுவன தேர்வு முறை:
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
RITES விண்ணப்ப கட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் General / OBC விண்ணப்பதாரர்களிடம் ரூ.600/- மற்றும் SC / ST / PwBD / EWS விண்ணப்பதாரர்களிடம் ரூ.300/- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.
RITES விண்ணப்பிக்கும் முறை:
- இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/ என்ற இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
- 13.02.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.