RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Senior Engineer, Quality Control / Materials Engineer, SHE Expert, Planning Engineer ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate Degree, MA, M.Sc டிகிரியை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 10 வருடங்கள் முதல் அதிகபட்சம் 12 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது குறைந்தபட்சம் ரூ.29,566/- முதல் அதிகபட்சம் ரூ.31,367/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.rites.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 16.02.2023 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.