Solid Waste Expert, Used Waste Water Expert போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை RITES நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ME, M.Tech, MBA, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள் / PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 08 வருடங்கள் முதல் அதிகபட்சம் 15 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய தினத்தின் படி, 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://recruit.rites.com/frmConsultatntRegistration.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று முதலில் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பிறகு பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் Annexure I என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இணைத்து தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 15 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.