RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Resident Engineer (Traction) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,10,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் அழைக்கப்படுகிறார்கள்.
Resident Engineer (Traction) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே RITES நிறுவனத்தில் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical Engineering பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
01.02.2023 அன்றைய தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 64 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த RITES நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 14 - 15 என்ற ஊதிய அளவின் படி, ரூ.2,10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
Resident Engineer (Traction) பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/Career என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் ritesdfc2014cv@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 07 நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.