Project Director / Project Leader / Project Coordinator, Multi Model Expert, Chief Financial Manager போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை RITES நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், RITES நிறுவனத்தில் Project Director / Project Leader / Project Coordinator, Multi Model Expert, Chief Financial Manager, Sr. Contract Expert, Sr. Environmental Expert / Noise & Vibration Expert போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 18 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Graduate அல்லது Postgraduate பட்டம் பெற்றவர்கள் இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.02.2023 அன்றைய நாளின் படி, 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் RITES நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://recruit.rites.com/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் Annexure I என்ற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10 நாட்களுள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.