Junior Manager பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை RITES நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,40,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RITES நிறுவனத்தில் Junior Manager பணிக்கு என 11 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Junior Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBA, PGDBA, PGDBM, PGDM, PGDHRM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த RITES நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
Junior Manager பணிக்கு தகுதியான நபர்கள் 17.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://rites.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 10.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.