ரயில்வே துறை கீழ் வரும் RITES நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் General Manager (Civil) பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், RITES நிறுவனத்தில் General Manager (Civil) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் SAG / NFSAG / SG Officer கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 18 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
General Manager (Civil) பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level - 13, 14 என்ற ஊதிய அளவின் படி, மாத சம்பளமாக பெறுவார்கள்.
இந்த RITES நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
General Manager (Civil) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.rites.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.