RITES நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Consultant (Electrical) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 01 வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது வெளியான அறிவிப்பில், RITES நிறுவனத்தில் Consultant (Electrical) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த RITES நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical / Electronics Engineering பாடப்பிரிவில் Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Consultant (Electrical) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்கள் / PSU நிறுவனங்கள் போன்றவற்றில் Electrical Engineering துறையில் AAI அல்லது Defense Officer பதவியில் போதிய ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய தினத்தின் படி, 62 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும்.
இந்த RITES நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் முந்தைய பணியின் போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.
Consultant (Electrical) பணிக்கு தகுதியான நபர்கள் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.