RITES நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் AGM / JGM / AM (HR) பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,60,000/- ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
RITES நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant General Manager (HR), Joint General Manager (HR) மற்றும் Assistant Manager (HR) பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSUs / CPSUs நிறுவனங்கள் போன்றவற்றில் HR துறையில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 05 ஆண்டுகள் முதல் 19 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 13.03.2023 அன்றைய தினத்தின் படி, 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Absorption Basis விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (13.03.2023) தபால் செய்ய வேண்டும்.