புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

By Gokula preetha - February 24, 2023
14 14
Share
புதுச்சேரி JIPMER பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
 

புதுச்சேரியில் உள்ள JIPMER பல்கலைக்கழகம் ஆனது ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பில் Research Associate மற்றும் Junior Research Fellow பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான எளிய வழிமுறை போன்றவை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.    

JIPMER பல்கலைக்கழக பணி குறித்த தகவல்கள்:

பணியிடங்கள்: JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Associate, Junior Research Fellow பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  
 
பணிக்கான கல்வி தகுதி: Research Associate பணிக்கு MD / M.Sc / ME / M.Tech / Ph.D பட்டதாரிகளும், Junior Research Fellow பணிக்கு ME / M.Tech / M.Sc பட்டதாரிகளும் தேவைப்படுகிறார்கள்.

பணிக்கான வயது வரம்பு: 10.03.2023 அன்றைய நாள் கணக்கின்படி, Research Associate பணிக்கு 40 வயது எனவும், Junior Research Fellow பணிக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் தகுதியான நபர்களுக்கு Research Associate பணிக்கு ரூ.55,460/- என்றும், Junior Research Fellow பணிக்கு ரூ.36,580/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.  

தேர்வு விவரங்கள்: இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Screening, Written Test, Personal / Technical Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

விண்ணப்பிப்பதற்கான விவரங்கள்: விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி நாள்: 10.03.2023 என்ற இறுதி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். 

Download Notification & Application Link 
Share
...
Gokula preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us