Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - நேர்காணல் மட்டுமே!

By Gokula Preetha - February 21, 2023
14 14
Share
Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை - நேர்காணல் மட்டுமே!


Assistant Manager / Executive / Trainee பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை Repco Home Finance நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Repco Home Finance பணியிடங்கள்:

Repco Home Finance நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Manager / Executive / Trainee பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Assistant Manager / Executive / Trainee கல்வி விவரம்:

Assistant Manager / Executive / Trainee பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கில மொழியில் நன்கு பேச மற்றும் எழுத தெரிந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.  

Assistant Manager / Executive / Trainee வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2023 அன்றைய நாளின் படி, 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Assistant Manager / Executive / Trainee சம்பள விவரம்:
  • Assistant Manager பணிக்கு ரூ.24,500/- என்றும்,
  • Executive பணிக்கு ரூ.21,500/- என்றும்,
  • Trainee பணிக்கு ரூ.12,500/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
Repco Home Finance தேர்வு செய்யும் முறை:

இந்த Repco Home Finance நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் 24.02.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Repco Home Finance விண்ணப்பிக்கும் வழிமுறை:

Assistant Manager / Executive / Trainee பணிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us