ICICI வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Relationship Manager பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ICICI வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Graduate Degree, Post Graduate Degree, MBA முடித்தவராக இருக்க வேண்டும்.
Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Sales, Relationship Management போன்ற பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள ICICI வங்கியில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.
Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இந்த ICICI வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.