RCFL நிறுவனத்தில் ரூ.79,280/- மாத சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officer மற்றும் Engineer பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 30.01.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
RCFL நிறுவன காலிப்பணியிடங்கள்:
RCFL நிறுவனத்தில் காலியாக உள்ள Officer பணிக்கு என 04 பணியிடங்களும், Engineer பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Officer / Engineer கல்வி தகுதி:
- Officer பணிக்கு அரசு அல்லது UGC / AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree அல்லது Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Engineer பணிக்கு அரசு அல்லது UGC / AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, ME, M.Tech, Post Graduate Degree அல்லது Post Graduate Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Officer / Engineer வயது வரம்பு:
- Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.12.2023 அன்றைய நாளின் படி, 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.12.2023 அன்றைய நாளின் படி, 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
Officer / Engineer சம்பளம்:
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் ரூ.79,280/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
RCFL தேர்வு செய்யும் விதம்:
இந்த RCFL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Personal Interview வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
RCFL விண்ணப்ப கட்டணம்:
- General / OBC / EWS - ரூ.1000/-
- SC / ST / PwBD / Female / ExSM - விண்ணப்ப கட்டணம் கிடையாது
RCFL நிறுவன விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2023 அன்று முதல் 13.02.20232 அன்று வரை ttps://www.rcfltd.com/hrrecruitment/recruitment-1 என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.