RBI வங்கியில் காத்திருக்கும் பகுதி நேர வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

By Gokula Preetha - January 23, 2023
14 14
Share
RBI வங்கியில் காத்திருக்கும் பகுதி நேர வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!


Reserve Bank of India (RBI Bank) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Bank's Medical Consultant பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 13.02.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Reserve Bank of India காலிப்பணியிடங்கள்:

RBI வங்கியில் காலியாக உள்ள Bank's Medical Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Bank's Medical Consultant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது MCI அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS அல்லது General Medicine பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் வங்கி இருக்கும் தொலைவில் இருந்து 03 முதல் 05 கிலோ மீட்டருக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Bank's Medical Consultant அனுபவம்:

Bank's Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மருத்துவமனை, கிளினிக் போன்றவற்றில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் மருத்துவராக சேவை செய்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Bank's Medical Consultant ஊதியம்:

இந்த RBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.1000/- ஒரு நாளுக்கான ஊதியமாக பெறுவார்கள்.

RBI Bank தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Bank விண்ணப்பிக்கும் முறை:

Bank's Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள மருத்துவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (13.02.2023) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.         

Download Notification Link
Download Application Form Link
        
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us