சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை - Project Fellow ஆக பணிபுரிய விரும்புபவர்களுக்கான வாய்ப்பு!

By Gokula preetha - February 24, 2023
14 14
Share
சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை - Project Fellow ஆக பணிபுரிய விரும்புபவர்களுக்கான வாய்ப்பு!
 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் (University Of Madras) இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த சுற்றறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் Project Fellow பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்களுக்கு சரியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக பணி பற்றிய விவரங்கள்:

காலியிடங்கள்: சென்னைப் பல்கலைக்கழகத்தில் (University Of Madras) இயங்கி வரும் புதிய திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்டுள்ள Project Fellow பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
 
கல்வி / பணி பற்றிய விவரங்கள்: Project Fellow பணிக்கு அரசு / அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Analytical Chemistry, Organic Chemistry, Inorganic Chemistry, Physical Chemistry பாடப்பிரிவில் M.Sc பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்க தேவையான வயது : இப்பணிக்கு என வயது வரம்பு எதுவும் தற்போது முடிவு செய்யப்படவில்லை.

சம்பளம் பற்றிய விவரம்: இந்த சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- சம்பளமாக கொடுக்கப்படும்.  

தேர்ந்தெடுக்கப்படும் முறை: Project Fellow பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் நாள்: இப்பணிக்கான நேர்முக தேர்வானது 13.03.2023 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ளது.  

விண்ணப்பிப்பதற்கான விதம்: இந்த சென்னைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் சுற்றறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவாறு தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து பல்கலைக்கழக முகவரிக்கு மற்றும்  hod@analyticalchemistryunom.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இறுதி நாள்: 09.03.2023 என்ற இறுதி நாளுக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.   

Download Notification PDF
Share
...
Gokula preetha