புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Research Assistant பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலில் தவறாது கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
Research Assistant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
இந்த புதுவைப் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Social Science பாடப்பிரிவில் Master Degree, M.Phil, Ph.D Degree அல்லது Women Studies பாடப்பிரிவில் M.P.Ed Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் ஆராய்ச்சி செய்வதில் குறைந்து 01 ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருப்பின் முன்னுரிமை தரப்படும்.
இந்த புதுவைப்பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான சான்றிதழ்களின் நகலையும் இணைத்து jags.nathi@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (06.02.2023) அனுப்ப வேண்டும்.