PGIMER பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!

By Gokula Preetha - January 30, 2023
14 14
Share
PGIMER பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் அருமையான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க முழு விவரங்களுடன்!


PGIMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Field Investigator பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.      

PGIMER காலிப்பணியிடங்கள்:

PGIMER பல்கலைக்கழகத்தில் Field Investigator பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Field Investigator கல்வி தகுதி:
  • Field Investigator பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பஞ்சாப், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை உள்ளவராகவும், கணிப்பொறி பற்றிய அடிப்படை அறிவு உள்ளவராகவும் இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.    
Field Investigator அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Field Investigator சம்பளம்:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

PGIMER தேர்வு செய்யும் விதம்:

Field Investigator பணிக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

PGIMER விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (CV) தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து saltfortificationpgi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 03.02.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.   

Download Notification PDF
Share
...
Gokula Preetha
Govtexamporatal
Disclaimer Privacy Advertisement Contact Us