ONGC நிறுவனத்தில் 56 காலிப்பணியிடங்கள் - ரூ.70,000/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Consultant மற்றும் Associate Consultant பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 09.03.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ONGC பணியிடங்கள்:
ONGC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Junior Consultant - 18 பணியிடங்கள்
- Associate Consultant - 38 பணியிடங்கள்
Junior / Associate Consultant தகுதிகள்:
- Junior Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ONGC நிறுவனத்தில் Production / Drilling துறைகளில் E1 முதல் E3 வரை உள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Associate Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ONGC நிறுவனத்தில் Production / Drilling துறைகளில் E4 முதல் E6 வரை உள்ள ஊதிய அளவின் கீழ்வரும் Executive பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Junior / Associate Consultant வயது விவரம்:
இந்த ONGC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22.02.2023 அன்றைய நாளின் படி, 65 வயதுக்கு மேற்படாதவாராக இருக்க வேண்டும்.
Junior / Associate Consultant சம்பள விவரம்:
- Junior Consultant பணிக்கு ரூ.42,000/- முதல் ரூ.43,350/- வரை என்றும்,
- Associate Consultant பணிக்கு ரூ.68,000/- முதல் ரூ.70,000/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
ONGC தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview / Interaction வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ONGC விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த ONGC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு இறுதி நாளுக்குள் (09.03.2023) அனுப்ப வேண்டும்.